தொடர் ஓட்டம் தளராத சிந்தனை
வளர்ச்சி காண இலக்கை அடைய
நம் ஓட்டம் தொடரட்டும் !
கல்வி தரும் அறிவு
அனுபவம் தரும் நம்பிக்கை
தோல்விகள் தரும் வலிமை
துவண்டு போகா தைரியம்
இலக்கை நோக்கிய பார்வை
இன்னல்களைத் தாங்குமே !
நட்பு தரும் அரவணைப்பு
நன்மைகள் பல தருமே !
நவீனம் தரும் அறிவும்
நம்பிக்கை தந்து வெற்றிக்கு வழியாய் !
வண்ண மின்னல் கண்ணில் பாயும்
எண்ணம் முழுக்க இலக்கின் பயணம்
மண்ணில் வியர்வைத்துளி விழும்
பண்ணிசைத்து பரவசமாக்குமே !
ஏணிகள் இருக்கு ஏற்றம் காணவே
இலக்கை அடைய தொடர் ஓட்டம்
இலக்கை அடைவோம்
இன்பம் பெறுவோம் !
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.